சிறுவர் தினத்தில்  சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்! - யு.எச்.ஹைதர் அலி 

1979ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ஐ.நா மனித உரிமை பேரவையில் உரை நிகழ்த்திய போலாந்து நாடு விசேட ஒரு பிரேரணையை முன் மொழிந்து. சர்வதேச ரீதியாக சிறுவர்களை பாதுகாக்க சிறுவர்களுக்கான ஒர் உரிமை சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் அதன் அவசியம் என்பது பற்றி எடுத்துரைத்தது. 

இப்பிரேரனையை ஐ. நா.மனித உரிமை பேரவையும்  ஏகமனதாக அங்கிகரித்தது. அன்றைய தினம் சிறுவர்களுக்கான ஒரு நாளை நினைவு கூறுவதற்கான சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த சிறுவர்களுக்கான உரிமை சாசனம் ஒன்றினை உருவாக்குவதற்கு முன்மொழிவு கொண்டுவரப்பட்ட அன்றைய தினம் தொட்டு ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர்தினம் கொண்டாடப்படுகிறது. இருந்தும் உலக நாடுகள் தத்தமது நாட்டின் முக்கியத்துவமிக்க நாட்களை சிறுவர் தின நாளாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் இந்திய ஜகவர்ளால் நேருவின் பிறந்த தினத்தை இந்தியாவின் சிறுவர் தினமாகவும் அறிவித்தது. 

1979 ஒக்டோபர் 1ம் திகதி சிறுவர் உரிமை சாசனம் உருவாக்களுக்கான பிரேரனை முன் மொழிவு கொண்டுவரப்பட்டாலும் 1989 ஆண்டு தான் இந்த சிறுவர் உரிமை சாசனம் தயாரிப்பு நிறைவு பெற்றது.

1990 ஆண்டு தொடக்கம் 1993 காலப்பதி உலக நாடுகள் இந்த சிறுவர் உரிமை சாசனத்தினை உலக நாடுகள் அங்கிகரித்து ஏற்றுக்கொல்லும் காலப்பகுதியாகும். அந்தவகையில் ஸ்ரீ லங்கா 1991ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி இந்த சிறுவர் உரிமை சாசனத்து அங்கிகரித்து இதனை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஏற்றுக்கொண்டது. எனவே இந்த தினத்தையே இலங்கையின் சிறுவர் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.

1993 ஒக்டோபர் காலப்பகுதியில் உலகில் உள்ள இரண்டு நாடுகளைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் இந்த சிறுவர் உரிமை சாசனத்தை அங்கிகரித்து ஏற்றுக்கொண்டிருந்தது.

1995ம்  ஆண்டு இடம் பெற்ற ஐநா சிறுவர் உரிமை சம்பந்தமான மீளாய்வு மகாநாட்டில் இலங்கையின் சிறுவர் உரிமை பாதுகாப்பு சம்பந்தமாக பல காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வக்கப்பட்டன , விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகள் இணைப்பு போன்றவை முக்கிய காரணங்களாக முன் வைக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து 1994ல் பதவியேற்ற சந்திரிகா அரசு  1996ம் ஆண்டு விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றினை அமைத்து இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டது.  

இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றரை வருடங்களுக்கு மேல் தங்களது ஆய்வுகளை இலங்கையில் மேற்கொண்டு சில பரிந்துரைகளை முன்வைத்தது . அதில் குறிப்பாக 

1. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை NCPA ஒன்றினை உருவாக்குதல் 

2. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு சபை DCPC  ஒன்றினை உருவாக்கல். 

அந்தவகையில் தான் 1998ம் ஆண்டு  (ACT No.50 of 1998) தேசிய சிறுவர் அதிகாரசபை நிறுவப்பட்டது. 

2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ அரசு  சிறுவர் பாதுகாப்புக்கு  அதிகாரசபை  என்று ஒன்று இருக்கும் போதே சிறுவர்களுக்கான சிறுவர் அபிவிருத்தி அமைச்சு ஒன்றினை உருவாக்கியது. இது மேலும் பல சட்ட சிக்கல்களை சிறுவர்கள் சம்பந்தமாக வேலை செய்பவர்கள் மத்தியில் உருவாக்கியது. அதிகார சபைக்கு அதிகாரம் கூடுதலா அல்லது அமைச்சுக்கு அதிகாரம் கூடுதலா என்ற இலுபரிகளுக்கும் உட்பட்டது. 

2015 நல்லாட்சி என்னும் போர்வையில் உருவான அரசுகூட சிறுவர்களது நலன் சார்ந்த பாதுகாப்பு சார்ந்த எந்த விசேட நடவடிகைகளையும் எடுக்க வில்லை.

தற்போது மீண்டும் உறுவான ராஜபக்ஷ குடும்ப அரசு 2006 ல் உறுவாக்கப்பட்ட சிறுவர் மகளிர் அமைச்சை இல்லாமல் ஆக்கிவிட்டது இருந்தும்  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடைமுறையில் இருக்கிறது இதன் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

சிறுவர்ப்பாதுகாப்புக்காக இப்படியான பல பொறிமுறைகள் இருந்தும் இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு என்பது ஆரோக்கியமான ஒருநிலையில் இல்லாமல் இருப்பது வேதனைக்குறியது. 

தற்போதைய அரசின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  பிரதீப பண்டார தென்னகோன் சிறுவர் திருமணத்திற்கு எதிராக 

திருமண வயது 18ஆக உயர்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் ஒரு தனிபர் பிரேரனை கொண்வந்தது அது சம்பந்தமான வர்தமானி செப்டம்பர்  25ம்திகதி வெளியிடப்பட்டது. இது உண்மையில் வரவேற்கத்தக்கது பாராட்டுகுறியது .

உலகளாவிய ரீதியில் 1.7 பில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

 மூன்றாம் உலக நாடுகளில் 5 ல் 2 பெண்கள் 18 வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சர்வதேச பரப்பில் யுத்தங்களினால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் 450 மில்லியன் குழந்தைகள் வாழ்கின்றனர்.

 தெற்காசியாவில் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள், கடத்தல், பாலியல் சுரண்டல், பெண் பிறப்புறுப்பு சிதைவு / வெட்டுதல், குழந்தைத் திருமணம் என்று நாளுக்கு நாள் சிறுவர்கள் பல லட்சம்  குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகின்றனர்

 இந்தியாவில், 12 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர், மற்றை நாடுகளில்  60 மில்லியன்கள் இருப்பதாக மதிப்பிடுகின்றனர்.

ஶ்ரீ லங்காவில் 2லட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் கரையோர பகுதிகளில் Beach Boysக  பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வருடம் 2020 முதல் 15 நாட்களில் 140 க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெற்றிறுக்கின்றன இதில் 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் இருந்து பதிவாகியிருந்தன.  2020ல் நாட்டில் 5242 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 1642  இன்றுவரை பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்குகள், 

பதிவாகியிருந்து என்பதும் கூறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் ஒவ்வொருவருடமும் ஒக்டோபர் 1ம் திகதி பாடசாலைகள் எங்கும் சிறுவர்தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்கிறார்கள் இலங்கையின் ஊடகங்கள் இந்த சிறுவர் தின கலியாட்டத்துக்கு முன்னுரிமையும் வழங்குகிறார்கள். 

இந்த சிறுவர் தினம் நிகழ்வு  ஏன் உருவாக்கப்பட்டது ?அதன் பின்னனி என்ன? சிறுவர் உரிமை சாசனத்தை நினைவூட்ட பிரகடனப்படுத்திய சிறுவர்தினம் வெறுமனே ஒருநாள் காலியாட்டமாக மாறிவிட்டதா ?

இந்த சிறுவர் உரிமைகள் சாசனம் சம்பந்தமாக அல்லது இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகள் சம்பந்தமாக  குறைந்தது  எமது ஆசிரியர்களாவது  தெளிவுடன் இருக்கிறார்களா ? என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. 

இந்த சிறுவர் தினத்தை கொண்டாடும் நிகழ்வுகளை முகநூல்களில் பதிவிட்டு லைக்குகளாலும் கொமெண்ட்ஸுகளாலும் திருப்தியை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் முதலில் இந்த சிறுவர் உரிமை பாதுகாப்பு சாசனத்தை வசித்தாவது , உங்களை அறியாமல் உங்களது புகழுக்காக இனையத்தில் நீங்கள் செய்யும் சிறுவர்களுடைய போட்டோக்களை பதிவேற்றுகிறீர்கள் இதுவும் சிறுவர் உரிமை மீரல்களில் ஒன்றே என்பதையும் கவணத்தில் கொள்ளுங்கள். 

இந்த 2020 அக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினத்திலிருந்தாவது சிறுவர்களின் பாதுகாக்க உதவுங்கள். 

சிறுவர் உரிமைகளை மதிப்போம் சிறுவர்களை பாதுகாப்போம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.