மீண்டும் வெற்றி பெறுவோம்
இப்போது உலகில் பல நாடுகளை பிடித்து, வாட்டி வதைக்கின்ற கொரோனா நோயிலிருந்து எமது நாடு பாதுகாப்பு பெற்ற நாடாக ஆக்கப்பட்டது பற்றி நாம் மனமகிழ்சியடைந்தோம். அதுபற்றி பெருமையாக பேசிக்கொண்டோம். எமது நாட்டு ஜனாதிபதியின் தலைமையில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் என பலரின் அயராத அர்பணத்தினால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை நாம் மறக்கமாட்டோம்.
மீண்டும் கொரோனாவின் அச்சுறுத்தல் நாட்டின் ஒருசில பகுதிகளில் ஏற்பட்டிருப்பது வருத்தப்படக்கூடிய விடயமாக இருந்தாலும், இந்த நேரத்தில் நாம் அச்சப்பட்டு அவதிப்படாமல் எமது உடலை, நாம் வாழும் இடத்தை சுகதார ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாத்துக்கொள்வது எமக்காகவும் எமது உறவுகளுக்காகவும் நாம் செய்யவேண்டிய முதல் கடமையாகும்.
மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள, மனித இனம் உலகில் கௌரவமான இனம் என்பதை புரியவைக்க, மனிதத்துவம் பாதுகாக்கப்பட, மனிதன் இயல்பு நிலைக்கு திரும்ப, மருத்துவ ஆலோசனைகள், அரச சட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. மனிதன் என்ற வகையில் நாம் அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறோம். சுகாதார பணியாளர்களால் முன்வைக்கப்படும் கட்டளைகளை நாம் முழுமையாக பின்பற்றி அவர்களுக்கும் அரசுக்கும் முன்பு போன்று இப்பொழுதும் ஆதரவாய் இருப்போம்.
இறைவனை பிரார்த்திப்பதும் மருத்துவ, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதும் எம்மையும் எமது மனித சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கு நாம் வழங்கும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். அதற்கு அழகான கூலிகளும் கிடைக்கும்.
---------------
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்