ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் உள்ள 16 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக (இன்று மாலை 6 முதல்) பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த ஊரடங்கானது கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, திவுலபிடிய,மினுவாங்கொட,வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் இந்த மாறுபட்ட அறிவிப்புக்களால் பொதுமக்கள் வெகுவாக குழப்பத்திற்கு ஆளாகியிருப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.