கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் புதிய சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக வைரசு தொற்றுக்குள்ளான ஒருவர் முதலாவது கட்டத்தின் கீழ் அவர்களது வீட்டிற்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய முறையில் தனிமைப்படுத்தப்படுகின்றனரா? கண்காணித்தல் பணிகள் பல கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும்.

காலை 6.00 தொடக்கம் 11.00 மணி வரையில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகளினால் அவர்கள் கண்காணிக்கபடுவார்கள்.

காலை 11.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் வலயத்தில் பொலிஸ் பிரிவு அதிகாரிகளினாலும் மாலை 4.00 மணி தொடக்கம் மீண்டும் மறுதினம் காலை 6.00 மணி வரையில் சம்பந்தப்பட்டவரின் வீட்டு எல்லைப்பகுதிக்குள் உள்ள எத்தகைய முப்படை முகாமையை சேர்ந்த அதிகாரிகள் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவர்களின் இந்த சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு மீறப்பட்டால் பிரதேச பிரதான சுகாதார அதிகாரியின் ஆலோசனையின் அடிப்படையில் பிரதான தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொவிட் வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.