திவுலபிடிய கொத்தணியில் இன்றைய தினம் (22) இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள இரு ஆடை தொழிற்சாலைகளின் ஊழியர்கள் எனவும், 06 பேர் பேலியகொடை மீன் சந்தை ஊழியர்கள் எனவும் 22 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2558 ஆகவும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6038 ஆகவும் உயர்வடைந்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.