புலமைப் பரிசில் மற்றும் ஏ.எல். பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சை குறித்த தினத்தில் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

பரீட்சை ஏற்கனவே திட்டமிட்ட  படி ஒக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் சுகாதார விதிமுறைகள் கடுமையாக பேணப்படும் என்று அமைச்சர் மேலும் தெரித்தார்.
 
இதேவேளை க.பொ.த. உயர் தர பரீட்சையும் ஏற்கனவே குறிப்பிட்ட தினத்தில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)