யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ( 02.10.2020) இடம்பெற்றது.

ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றது.

நிகழ்வில் புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் யோகராஜன், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ, அரசாங்க தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.