5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக, விண்ணப்பித்த சகல மாணவர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டையை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற் தடவையாக இந்த அனுமதி அட்டை வழங்கப்படவுள்ளதுடன்,  இந்த அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதி அட்டையில், பரீட்சை மத்திய நிலையம், பரீட்சை எண் என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மாதம் 11ஆம் திகதி, 2,936 மத்திய நிலையங்களில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதில் 3,31,694 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Tamilmirror)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.