கொரோனா சிகிச்சை நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளவத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கஹட்டோவிட்ட வாழ் முஸ்லிம் சகோதரர்களின் உதவி!

வத்துபிடிவல ஆதார வைத்தியசாலை கம்பஹா மாவட்டத்தில் காணப்படுகின்ற பிரதான அரச வைத்தியசாலைகளில் ஒன்றாகும்.கம்பஹா மாவட்டத்தில் தற்போது வேகமாக வரும் கொரோனா பரவலை அடுத்து இந்த வைத்தியசாலையில் ஒரு பகுதியையும் கொரோனா தொற்று சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவை உருவாக்கியதன் காரணமாக வழமையான அலுவல்கள் செலவினங்களை விட கூடுதலான செலவினங்களையும் பொறுப்புக்களையும் வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டிய நிலைமையில் காணப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் கஹட்டோவிட்ட வாழ் பிரதிநிதிகளிடமும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களில் ஒருவராக உள்ள சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களிடம் அவர்கள் எதிர் கொள்ளும் தேவைகள் அத்தியாவசிப்பொருட்கள் குறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் காரணமாக  அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்பின் பயனாக கஹட்டோவிட்ட  வாழ் முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் யூத் அமைப்பினர் இந்த விசேட பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிற்றூழியர்களுக்கு தேவையான தேநீர் சமைப்பதற்கு தேவையான பொருட்களை சுமார் 15 ஆயிரம் அளவில் சேகரித்து வைத்தியசாலை நிர்வாகத்திலுள்ள சிரேஷ்ட வைத்தியர் பண்டார அவர்களிடம் நேற்றைய தினம் கஹட்டோவிட்ட முஸ்லிம் யூத் அமைப்பினர் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழுள்ள சுமார் 70 பேர் கொண்ட தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ளவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் சிலர் இருந்த ஆடையுடனே தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்து சென்றமையால் ஆடைகளை மாற்றி கொள்வதற்கு மேலதிக உடைகள் எதுவும் இல்லாதமையாலும் ,பெண்களுக்கு தேவையான உள்ளாடைகள் ,பேட்கள் ,குழந்தைகளுக்கு தேவையான பெம்பர்ஸ்கள் ,ஆடைகள் போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இவற்றை பெற்று தர முடிந்தவர்கள் அவசரமாக இதனை நிவர்த்திக்க உதவி செய்ய வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை கவனிக்க  வேண்டிய விடயமாகும்.

ஆகவே சமூகத்தில் உள்ள வசதி படைத்தவர்களும் சமூக சேவை தொண்டர்களும் ஏனைய பொதுமக்களும் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட கொரோனா விசேட சிகிச்சை நிலையத்துக்கான அத்தியாவசிய தேவைகளையும் ,அதன் கண்காணிப்பின் கீழுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள வறிய நோயாளர்களின் அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி கொடுக்க முன்வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பிரதேச வாழ் மக்களையும் நலன் விரும்பிகளையும் வினயமாக வேண்டிக்கொள்கின்றனர்.

இந்த உதவிகளை நேரடியாக வைத்தியசாலை நிர்வாகத்திடமோ அல்லது கஹட்டோவிட்ட முஸ்லிம் யூத் அமைப்பினர் ஊடாகவோ வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்க முடியும்.

மேற்படி வேண்டுகோளின் ஒரு அம்சமாகவே கஹட்டோவிட்ட வாழ் முஸ்லிம்கள்  சார்பில் மேற்படி பங்களிப்பை கஹட்டோவிட்டா முஸ்லிம் யூத் அமைப்பினர் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரிமும் வைத்தியர்களிடமும் கையளிக்கும் போதான நிகழ்வையே படங்களில் காணலாம்.

யாராவது இதற்காக உதவிகள் செய்ய விரும்பினால் கீழுள்ள இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் இந்த நற்காரியத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என வைத்தியசாலை அபிவிருத்தி கமிட்டியின் உறுப்பினரும் சமூக சேவகருமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


கணக்கிலக்கம் 

இலங்கை வங்கி 

0085331795

அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் 

072 742 2242

அல் ஹாஜ் சில்மி

0772072494


செய்தி தொகுப்பு.

எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்.

ஊடக அனுசரணை : கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல் பேஜ்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.