ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபை வளாகம் வரலாற்றில் முதல் முறையாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையினால்  வெசாக்  மற்றும்  கிறிஸ்மஸ் நிகழ்வுகள்  வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ், முஸ்லிம்  மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த சபையில் தீபாவளி மற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாநகர சபை முதல்வர் ரோஸி சேனாநாயக்க உடனடியாக  இதற்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியதனால்  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்  தனது  சொந்த முயற்சியில் இந்த  அனுசரணையாளர்களை கொண்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த நாள் நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறும் அடுத்தடுத்த வருடங்களில் மாநகர சபையால் இதற்கான  நிதி ஒதுக்கப்படும் எனவும்  உறுதியளித்தார். 

இதன் அடிப்படையில்  வரலாற்றில் முதல் முறையாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுக்காக  கொழும்பு  மாநகர வளாகம் மின்சார விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.