இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இறுதி இறைதூதரான நபிகள் பெருமானாரின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

நபி பெருமானார் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது தமது நம்பிக்கையென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. இத்தகைய பின்பலத்தில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்வது உள அமைதியைப் பெற்றுத் தரும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மீலாத் தின வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளார். நபிகள் பெருமானார் வாழ்நாள் முழுவதிலும் பேணிய குண நலன்களும், அவர் மனிதர்களுக்காகச் செய்த அர்ப்பணிப்புகளும் அளப்பரியவை. அவரது பிறந்த தினத்தை நினைவுகூரும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கூறியுள்ளார்.

நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில்இ இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களுடன் சகோதரத்தைப் பேணி வாழும் விதத்தை நினைவுகூர்ந்துள்ளார். கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நபி பெருமானாரின் நற்குணங்களைக் கடைப்பிடித்து நாட்டு நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நீதியமைச்சர் கேட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.