அமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது.

அரசமைப்பின் 20ஆம் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் கட்சி ​தலைவர்களுக்கும் இடையில் நேற்று (18) முக்கிய கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, அமைச்சர் பந்துல குணவர்தன தாமதமாகவே வருகைதந்தார்.

கூட்டத்தின் இடைநடுவில் வந்தமையால், தாமதத்துக்கான காரணத்தை, பந்துலவிடம் ஏனையோர் வினவினர், “பிசிஆர் பரிசோதனையை செய்துகொண்டேன், ஆனால், இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துவிட்டார்.

எனினும், கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, கூட்டமும் ஒத்துவைக்கப்பட்டது. அங்கு அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலேயே ஆராயப்பட்டது.

இதேவேளை, 20ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (19) முக்கிய கூட்டமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

(தமிழ் மிரர் இணையம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.