SLPP கட்சியின் ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தால் மாத்திரம் ஒருவரை கைது செய்யக் கூடிய சட்டம் நாட்டில் இருக்கின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை (11) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

கைது செய்யுமாறு கோரி தற்போது ஜனாதிபதியிடம் சென்று கடிதம் கொடுக்கின்றனர். அப்படி எவரையும் கைது செய்ய முடியுமா?. பொதுஜன பெரனவின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கி இவரை கைது செய்யுமாறு கூறினால், அப்படி கைது செய்யக் கூடிய சட்டம் நாட்டில் இருக்கின்றதா?. அந்த சட்டம் என்ன?.

அப்படி கைது செய்வதாக இருந்தால், இந்த நாட்டில் நீதிமன்றங்கள் தேவையில்லை. சட்டத்தினால் எந்த பயனுமில்லை. பொலிஸாரால் எந்த பிரயோசனமும் இல்லை. குற்றவியல் விசாரணை திணைக்களமும் தேவையில்லை. இது சட்டத்தை மதிக்கும் நாடு.

ரியாஜ் பதியூதீனை விடுதலை செய்தது நாங்கள் அல்ல. அவருக்கும் குண்டு தாக்குதலுக்கு தொடர்பில்லை என அமைச்சர் சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கூறினார். இதனால், இவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும் குண்டு தாக்குதலுடன் அவருக்கு தொடர்பில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால், பொதுஜன பெரமுனவினர் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் பொலிஸாரா? குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் உள்ளவர்களா? அன்று பல கதைகளை கூறிவர்களுக்கு தற்போது காற்சட்டை இன்றியே வீதியில் செல்ல நேரிடும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.