கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப முழுமையான உதவியை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதி அளித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை சந்தித்துப் பேசினார். சுற்றுலாத்துறைக்கு உதவும் வகையிலான யோசனைகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த பணியாளர்களின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் உதவ முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சங்கர் அம்மையார் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.