முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்படாமை குறித்து அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தமது அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரிசாட் கைது விவகாரத்தில் அரசாங்கம் நாடகமாடுகிறது எனவும், மக்களுக்கு நகைச்சுவை செய்யக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இந்த விடயங்களை நகைச்சுவையாக பார்க்க மாட்டார்கள். அவர்கள் எதிர்வரும் தேர்தலில் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த நிலைமையே அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கும் நேரும் என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.