இன்றிலிருந்து (08) கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களிலுள்ள தனியார் மருந்தகங்களிலிருந்து ஒன்லைன் (Online) முறையில் ஒளடதங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் health.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக குறித்த மருந்தகங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிகா விக்கரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.