நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வௌி மாவட்டங்களில் கல்வி பயின்று கம்பஹா மாவட்டத்திலிருந்து க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டத்திலேயே ஒரு பரீட்சை மண்டபத்தை ஏற்பாடு செய்து தருவதாக கல்வி அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ் இன்றைய தினம் (08) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எமது சியன ஊடக வட்டம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அவ்வாறு வெளி மாவட்டங்களில் கல்வி பயின்று உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கம்பஹா மாவட்ட மாணவர்கள் உடனடியாக கீழுள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தம்முடைய பிரச்சினைகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பரீட்சை திணைக்களம்:

 துரித அழைப்பிலக்கம் - 1911

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் - 0112785211/ 0112785212

பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் முடிவுகள் கிளை – 0112784208/ 0112784537/ 0113188350/ 0113140314

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.