ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, தமது பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (11) இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும், இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காகவும் விசேட அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணி அளவில் அனைத்து பரீட்சாத்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சை எதிர்வரும் திங்கட் கிழமை 12 ஆம் திகதி காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கம்பஹா மாவட்டங்களில் இருந்து வெளி பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டங்களினுள்ளேயே விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.