மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவானமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் பரவல் தொடர்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 200 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.