அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பார்த்து அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை எதற்காக வைக்கின்றோம்? ஜனாதிபதி ஒருவரை நியமிக்க. நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதற்காக. அவரை ஜனாதிபதியாகி அவரின் கைகளை கட்டி கங்கையில் வீசிவிட்டு நீந்த சொல்வது சரியா? அவர் மூழ்கும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பின்னர் நாம் கூறுகிறோம் நீங்கள் நீரில் மூழ்கிறீர்கள் என்று. இது நகைப்புக்குரிய விடயம். ஜனாதிபதி நாட்டிற்கு வேலை செய்ய அதிகாரம் இருக்க வேண்டும்.  நான் இதை செய்தது நாடு தொடர்பில் சிந்தித்த பின்பாகும். எனக்கு கோட்டாபய ஜனாதிபதி மீது அதிக நம்பிக்கை உள்ளது. எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் நாட்டை கட்டி எழுப்புவார் என்று என அவர் தெரிவித்தார்.

மேலும் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.