கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள வெளிமாவட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டத்திலேயே பரீட்சைக்கு தோற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 

சற்று முன்னர் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

நாம் பரீட்சைகள் தொடர்பில் கம்பஹா மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள பரீட்சார்த்திகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போது ஊரடங்கு அமுலில் இருக்கும் 18 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள (வெளி மாவட்ட பாடசாலைகளின்) பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள்:

பொலிஸ் பிரிவுகள் மற்றும் பரீட்சை நிலையங்கள்

 • கனேமுல்ல -  கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம்
 • யக்கல, கம்பஹா, வீரகுல - மிரிஸ்வத்த கெபடிபொல வித்தியாலயம்
 • கிரிந்திவல - கிரிந்திவல மத்திய மகா வித்தியாலயம்
 • வெலிவேலிய, மல்வதுகிரிபிடிய - வெலிவேரிய மத்தும பண்டார வித்தியாலயம்
 • தொம்பே, பூகொட - தெகடன பத்மாவதி ம.வி.
 • நிட்டம்புவ, வெயாங்கொட - வெயாங்கொட ஜனாதிபதி வித்தியாலயம் 
 • மீரிகம, பல்லேவெல - டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலை, மீரிகம
 • மினுவாங்கொட - ஜனாதிபதி வித்தியாலயம், மினுவாங்கொட
 • திவுலபிடிய - ஞானோதய வித்தியாலயம், திவுலபிடிய
 • சீதுவ - தவிசமர வித்தியாலயம், சீதுவ
 • ஜா எல, கந்தான - ஜா எல சாந்த ம.வி.
 • களனிய - கிரில்லவல ம.ம.வி.
மேலும் உயர் தர பரீட்சைக்கு 12 பாடசாலைகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் பிரிவுகள் மற்றும் பரீட்சை நிலையங்கள்
 • கனேமுல்ல - புளுகஹகொட ஶ்ரீ விஜய ம.வி.
 • யக்கல, கம்பஹா, வீரகுல - மிரிஸ்வத்த கெபடிபொல வித்தியாலயம்
 • கிரிந்திவெல - கிரிந்திவெல மகா வித்தியாலயம்
 • வெலிவேலிய, மல்வதுகிரிபிடிய - வெலிவேரிய மத்தும பண்டார வித்தியாலயம்
 • தொம்பே, பூகொட - சியன தேசிய பாடசாலை, தொம்பே
 • நிட்டம்புவ, வெயாங்கொட - நிட்டம்புவ பௌத்த வித்தியாலயம்
 • மீரிகம, பல்லேவெல - கள் எலிய ஶ்ரீ வித்ய கனிஷ்ட வித்தியாலயம்
 • மினுவாங்கொட - கொடுகொட ராகுல வித்தியாலயம்
 • திவுலபிடிய - ரணசிங்க வித்தியாலயம்
 • சீதுவ - முகலங்கம பண்டாரநாயக்க வித்தியாலயம்
 • ஜா எல, கந்தான - தெஹியாகந்த வித்தியாலயம்
 • களனி - கிரில்லவல ம.ம.வி.

கம்பஹா மாவட்டத்திலிருந்து பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள வெளி மாவட்ட மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டத்தில் வைத்தே பரீட்சை எழுதுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சியன ஊடக வட்டத்தின் கோரிக்கையினையடுத்து உடனடியாக அதே தினம் பாராளுமன்றில் வாய் மூல வினா மூலம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் உட்பட பரீட்சை திணைக்களத்திற்கும் எமது சியன ஊடக வட்டம் மற்றும் சியன நியூஸ் இணையத்தளம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.