மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல- ரன்வெடியாவ, கொஸ்பொத எல பிர​தேசத்தில் விவசாயத்துக்காக நீர் எடுப்பதற்காக வெட்டப்பட்ட கிணற்றில் விழுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை (19) முதல் காணமல் இருந்த 3 சிறுவர்களையும் தேடிய போது, அவர்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15, 12 மற்றும் 7 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கலேவல பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.