மினுவாங்கொட தொழிற்சாலை கொத்தணி மூலம் தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸானது இதற்கு முன்பு பரவியதை விட தாக்கம் கூடியது என்று அரச மருத்துவ சங்கத்தின் (GMOA) செயலாளர் டாக்டர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த கொத்தணியின் மூலம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களை பரிசோதித்த போது அதன் செறிவு அதிகமாக இருந்ததாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்ததாகவும் அவ்வாறு இருக்கும் எனின் அது மிகவும் அபாயகரமான எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.