சீன உயர் மட்டக் குழுவின் இலங்கை விஜயத்தையடுத்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்!

Rihmy Hakeem
By -
0

 




அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன உயர் மட்டக்குழு இலங்கை வந்து சென்ற பின்னணியில் அவசரமாக அவரை கொழும்புக்கு அனுப்புகின்றது அமெரிக்கா.

எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

நெருக்கடியை சந்தித்துள்ள மிலேனியம் சலஞ் உடன்பாடு, மற்றும் சோபா எனப்படும் படைத்துறை உடன்பாடு போன்றவை தொடர்பில் பொம்பியோ பேச்சுக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே, அமெரிக்காவும் பலம் பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)