கைதான இளைஞன் மரணித்த சம்பவம் : பூகொட பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

Rihmy Hakeem
By -
0

 



பொலிஸால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பூகொட பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூகொட பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த 11 ஆம் திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)