ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கஹட்டோவிட வட்டார அமைப்பாளர் M.H.M.நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இல:- 369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் செலவில் கஹட்டோவிட நபவிய்யா தக்கிய்யாவுக்கு செல்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட  (Kahatowita Public Ground Road) வீதியை கொங்கிரீட் இட்டு புனரமைக்கும் வேலை M.H.M.நஸீர் அவர்களினால் நேற்றைய தினம் (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிதியினை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டிகளாகவிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் பிரியந்த புஷ்பகுமார, உப தலைவர் நீல் குணசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கஹட்டோவிட பிரதேச அமைப்பாளர் M.H.M.நஸீர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.