திஹாரிய  ‘ஹெல க்லோதிங்’ (Hela Clothing) மற்றும் பூகொட ‘சவுத் ஏஷியா’ (South Asia Textiles Limited) எனும் நிறுவனங்களில் தலா ஒரு ஊழியர் வீதம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளன.

'ஹெல க்லோதிங்’ நிறுவனத்தின் திஹாரிய பிரதேச கிளை தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த ஊழியர் இறுதியாக ஒக்டோபர் மாதம் 02ம் திகதி இறுதியாக பணிக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, அவர் பழகிய அனைவரும் தற்சமயம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பூகொட ‘சவுத் ஏஷியா’ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த தொழிற்சாலையும் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. 

எனினும் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏனையோரது PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்ததாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.