நேபாளத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக கொரோனாவில் இருந்து நாடு மீண்டுவிட்டதாக அறிவித்திருந்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 2,059 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். மேலும் கொரோனாவில் இருந்து நேபாளம் மீண்டுவிட்டதாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யோகேஷ் பட்டராய்க்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலை தவிர வேறு அறிகுறிகள் எனக்கு இல்லை.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்,' எனத் தெரிவித்துள்ளார்.

(IBC Tamil)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.