இன்றைய தினம் (10) மேலும் 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொவிட் தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் முதலாவது நபர் ராஜகிரியை சேர்ந்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 51 வயதுடைய ஆண் நபர் என்பதுடன் அவர் கடந்த 07 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் மற்றும் நியூமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நபர் ஆண் என்பதுடன் கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். சென்ற மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் மற்றும் சுவாச கோளாறு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது நபர் கம்பஹா - உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த பெண் என்பதுடன், நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் மற்றும் நியுமோனியா பாதிப்பு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்காவது நபர் 55 - 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் காணப்படாத ஆண் நபர் என்பதுடன் மரண பரிசோதனைக்காக அவரது உடல் நேற்று முன்தினம் (08) எடுக்கப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு கொவிட் தொற்று காரணம் என்று தெரியவந்துள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.