மஹர சிறைச்சாலை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தற்போது வரை 06 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சற்று நேரத்துக்கு முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலை 5.00 மணியளவிலும் குறித்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 43 வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.