நாட்டில் இதுவரை 612 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் 145 பேர் அடங்குவதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (10)

 91 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென்றும் இதில் 

கோட்டை பொலிஸ் நிலையத்தில் 82 பொலிஸார், 

பொலிஸ் தலைமையகத்தில் 6 பேர், 

கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் - 1

பொலிஸ் விசேட பிரிவு-1, பொலிஸ் விளையாட்டுப் பிரிவு-1 

என 91 பொலிஸார் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.