இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சுவாசப்பை கோளாறு காரணமாவே உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

இந்த மரணம் இலங்கையில் பதிவான 23 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.