இலங்கையில் மேலும் 05 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 05 மரணங்களும் கொரோனா தொடர்பான மரணங்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் இலங்கையில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 29 பேர் மரணமடைந்துள்ளனர்.

  1. முதலாமவர் கொழும்பு 02 இனை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவராவார். இவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
  2. 68 வயதுடைய, வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த பெண் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
  3. 58 வயதுடைய கொழும்பு 12 இனை சேர்ந்த பெண் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் இறந்துள்ளார்.
  4. 73 வயதுடைய கொழும்பு 14 இனை சேர்ந்த பெண் கொவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
  5. 74 வயதுடைய கொழும்பு 15 இனை சேர்ந்த ஆண் ஒருவர் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இறந்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.