(எம்.வை.அமீர்)

 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பிரிவு பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இப்பதவி உயர்வு 05.09.2019 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பிரிவிலேயே கல்வி கற்று அந்த பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தற்போது பேராசிரியராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ள கலாநிதி ரமீஸ் அபூபக்கர் சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்டவராவார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.