மேல் மாகாணத்தில்  உள்ள சில பிரதேசங்கள் திங்கட்கிழமை (16) முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் 19 இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை:

மேலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (15) நள்ளிரவு முதல் நீக்கப்படும்.

இதன்படி  மருதானை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டேம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் திங்கள் முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மேலும் ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்கொழும்பு, ஜாஎல, கடவத்த, வத்தளை, ராகம, பேலியகொடை  ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

களனி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

இவை தவிர, கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களில் நாளை (15) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படும்.

இவை தவிர நாளை அதிகாலை 5 மணி முதல் கீழ்வரும் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலை தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகர எல்லை, குளியாபிடிய பொலிஸ் பிரிவு, ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட மேற்கு கிராம சேவகர் பிரிவு, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு, மாவனெல்ல பொலிஸ் பிரிவு




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.