கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்றுமுறையை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். இதற்காக கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தேசிய கல்வி நிறுவனம், மேல் மாகாண முன்னணி பாடசாலைகள் மற்றும் தமிழ் மொழிக்காக யாழ்ப்பாணத்தில் முன்னணி பாடசாலைகளும், மாகாண கல்வி திணைக்களங்களையும் இணைத்து இலத்திரனியல் ஊடகங்கள், வானொலிகளையும் , தகவல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பாடங்களை கற்பிப்பதற்கான திட்டம் வகுக்கப்படுகின்றன.

இதற்காக கல்வி சபையின் அனுமதி பெறப்பட்டதுடன், ஒளிபரப்பு அலுவல்கள் தொடர்பாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

விசேடமாக பகல் வேளையில் ஆரம்ப பிரிவில் தரம் 3, 4 மற்றும் 5 தரத்துக்கான முக்கிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 11 வரையிலுமான முக்கிய பாடங்களும், உயர்தர வகுப்புக்களில் அனைத்து பாடங்களுக்குமான முக்கிய பாடங்களுக்காகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்புக்களை 2020.11.15 திகதி தொடக்கம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிகழ்ச்சிகள் அரசாங்கத்தின் முன்னணி பாடசாலைகளில் உள்ள அனுபவமிக்க ஆசிரியர்களினால் தொகுக்கப்பட்டு தயாரிக்கப்படுவதுடன், விடயதான பணிப்பாளர்களினால் கண்காணிக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 3 ஆம் தவணைக்கான பாடசாலை தரங்களுக்கான பாடங்களுக்கு அமைவான சிபாரிசுக்கு அமைய நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2020/11/15 திகதி ஆரம்ப தரம் மற்றும் பாடங்களுக்கு அமைவாக ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் நேர அட்டவணை ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுவதுடன், அது வரையில் இது தொடர்பாக ஊடகங்கள் மூலம் முழுமையாக தெளிவுபடுத்தல் மேற்கொள்ளப்படுமாயின் நன்றி உடையவராவோம்.

கலாநிதி உபாலி எம் சேதர

செயலாளர்,

கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.