பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.