நாட்டில்  இன்று (10) வரை 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலர் பூரண குணமடைந்து வீடுகளுக்கும் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பினுள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று (10) முதல் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவரை பொலிஸ்மா அதிபர் நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.