மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுதல் தடை செய்யப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கு சென்றவர்கள் அதே இடத்தில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், இவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்களை கண்டறியுமாறு அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று இவ்வாறு வந்திருப்பார்களாயின் இவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு அல்லது சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல் மற்றும் தங்குமிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கண்டறிவதற்காக மேலதிகமாக புலனாய்வு பிரிவும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை, எரிபொருள், உணவு, எரி சக்தி, மின்சாரம், நீர், மருந்து போன்ற அத்தியாவசிய சேவையை வழங்குவோருக்கு மாத்திரம் கடமைக்காக வாகனங்களின் மூலம் மேல் மாகாணத்திற்கு அப்பால் செல்வதற்கு அனுமதி உண்டு.

இதற்கு மேலதிகமாக கடமைக்கான அலுவலக அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட 112 சேவை ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.