கொரோனா தொற்று காரணமாக வீதிகளில் பலர் விழுந்து உயிரிழப்பதாக போலி தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய, 29 பேரைத் தேடி வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த 29 பேரில் அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் வசிக்கும் இருவரும் இலங்கையில் 27 பேரும் உள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்; தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு போலி தகவல்களை பரப்பிய கடுகண்ணாவ மற்றும் ஹந்தானை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(தமிழ் மிரர்)