மெனிங் சந்தை மூடப்பட்டுள்ளமையினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களின் அறுவடைகளை விற்பனை செய்வதற்காக பேலியகொட பிரதேசத்தில் வேறு ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வளாகத்தை இதற்காக ஒதுக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முறையாக பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொருளாதார புத்துயிர் ஊட்டல் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை மூடப்பட்டது.

மெனிங் வர்த்தக சந்தைக்கு நாளாந்தம் இரண்டாயிரம் மரக்கறி லொறிகள் வருகை தருகின்றன. இவற்றை வேறு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தியதன் பின்னர் கொழும்பு மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.