புறக்கோட்டை பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் மீண்டும் திறக்கப்படுகின்ற போதிலும் சில பகுதிகள் மாத்திரம் மீள அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மெனிங் சந்தை, 4 ஆம் மற்றும் 5 ஆம் குறுக்கு தெருக்கள் என்பன திறக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனியார் பேருந்து தரிப்பிடம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.