பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறு சமூக  பணிகளை மேற்கொண்டு வரும்  அல் ஹிக்மா சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைப்பானது  அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின்(AMYS)  பூரண அணுசரனையில்  2020.11.01 அன்று  இரத்ததான முகாம் ஒன்றை சுங்காவில் முபீன் ஜும்மா மஸ்ஜித் மத்ரஸா மண்டபத்தில் நடாத்தியது. 

இந் நிகழ்வில் பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது, இதில் குறிப்பாக பொலன்னறுவை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, சமூக நலன் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் ஆகியோர்   கலந்து கொண்டனர்.

தகவல்

L.M. சாஜித் (பொருளாளர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.