அம்பாறை மாவட்டத்தின் மஹஓய பிரதேச செயலகப் பிரிவில் பொல்லேபெத்த கிராமத்தின் கல்வலயாய வனத்தில் பாரியளவில் காடழிப்பு இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்கன்ன ஓய எல்லையான இந்தப் பகுதியில் ரம்மியமான வன வளங்கள் இருக்கின்றன.

இயற்கை வளங்களுடன் கூடிய இந்த இடத்தின் காணிகள் வெவ்வேறு நிறுவனங்கள், பல்வேறு செயற்றிட்டங்களுக்காக துப்புரவு செய்யப்படுகின்றன.

அவ்வாறான அழிவுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் 'பிம்தென்ன பத்துவை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த முன்னணி' எனும் பெயரில் புதிய மக்கள் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெற்று வருவதாக பிம்தென்ன பத்து பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சமந்த வித்யாரத்ன கூறினார்.

சில நிறுவனங்கள் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை இயந்திரங்கள் மூலம் துப்புரவு செய்துள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்காமல் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிம்தென்ன பத்து முன்னணி தெரிவிக்கின்றது.

அரச நிதியை செலவழித்து காடு வளர்க்கப்பட்ட இடம் தற்போது நிறுவனங்களால் சட்டவிரோதமாக துப்புரவு செய்யப்பட்டு வன வளம் அழிக்கப்படுவதாக சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார். (NF)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.