JAFFNA STALLIONS அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் காலி க்ளேடியேடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டெலியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி, காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அப்ரிடி 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் குணதிலக 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், யாழ்ப்பாண அணி சார்பாக ஒலிவியர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் திசர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஸ்க பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.. சொயிப் மலிக் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் போட்டியின் ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்ணான்டோ தெரிவானார்.


பேர்ஸ்டோவின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆட இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பவுமா 5, டி காக் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய டு பிளசிஸ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 58 ஓட்டங்களுடன் வெளியேறினார். வான் டர் டுசன் 37 ஓட்டமும், கிளாசன் 20 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். டேவிட் மலன் 17 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டம் எடுத்து வெளியேறினர். இயான் மார்கன் 12 ஓட்டங்களில் அவுட்டானார்.

பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில்  5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 86 ஓட்டங்களுடன் ஆடுகளத்தில் இருந்தார்.  ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 



பொல்லார்ட் அதிரடி வீண்: முதல் டி20-யில் மே.தீவுகள் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

ஓக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதியின் அடிப்படையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஓக்லாந்தில் இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. மழைக்காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்க வீரர் பிளெட்சர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 34 ஓட்டங்கள் விளாசினார். அதன்பின் வந்த ஹெட்மையர் (0), பூரன் (1), பொவோல் (0) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்த வந்த பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 75 ஓட்டங்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 181 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 5, ஷெய்பெர்ட் 17 பெற்று வெளியேறினர். அதன்பின் வந்த கான்வே 29 பந்தில் 41 ஓட்டங்கள் விளாசினார்.

கான்வே ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 12.2 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி 22 பந்தில் 41 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நீஷம், சான்ட்னர் அதிரடியாக விளையாடினர். 15.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



66 ஓட்டங்களால் இந்தியா தோல்வி- கோலி, ஷ்ரேயாஸ், கே.எல் ராகுல் சொதப்பல்

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை சந்தித்தது.

அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் 374 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 375 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் இரண்டு மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 5.2 ஓவரில் 53 ரன்கள் இருக்கும்போது மயங்க் அகர்வால் 18 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். ஹசில்வுட் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கேஎல் ராகுல் 12 ஓட்டங்களுடன் வெளியேற இந்தியா 101 ஓட்டங்களில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் தவான் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹர்திக் பாண்ட்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியில் சுவராஸ்யம் கூடியது.

தவானும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் அடித்து முன்னேறி சென்று கொண்டிருந்தனர். இந்திய அணி 34.3 ஓவரில் 229 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 86 பந்தில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆடம் சம்பா பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 128 ஓட்டங்கள் குவித்தது.

தவான் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் வெற்றிக் கனவு தகர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ஓட்டங்கள் அடித்து வெளியேறினார்.

இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.