முகப் புத்தகத்தில் அதிகமானவர்கள் அமெரிக்க பெண் உப ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் இலங்கை தேசிய அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் 5.5% வீதத்தில்தான் உள்ளது.

இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் மற்றும் வாய்ப்புக்கள் சரியான முறையயில் வழங்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்ததன்பின்னர் இதுவரை ஜனநாயக ரீதியான 74 தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தேர்தல்களின்போது ஆணாதிக்கம் தான் அதிகமான சந்தர்ப்பங்களிள் காணப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போதும் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களின் தீர்மாணம் எடுக்கும் சாரார் பெண்களை விட ஆண்களுக்கே சந்தர்ப்பத்தை அதிகமாக வழங்கியுள்ளார்கள். இவற்றை பார்க்கும் போது தெளிவாக விளங்கும் விடயம் தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சுயேட்ச்சைகுழுக்களும் மேடைகளிலும் அரசியல் விவாதங்களிலும் மாத்திரம் தான் ஜனநாயகத்தை பற்றிப் பேசுகின்றார்கள் ஆனால் கட்ச்சிகளுக்குள்ளே உள்ளக ஜனநாயகத்தை பின்பற்ற தவரி விடுகின்றனர். ஜனநாயகத்தின் பிரதான கோட்பாடுகளிள் ஒன்றான பால்நிலை சமத்துவத்தை பின்பற்ற மருக்கின்றார்கள். இதனால் இலங்கையில் 52% மேற்பட்ட வாக்காளர்களாக பெண்கள் இருந்தும் பாரளுமன்றத்தில் பெண்பிரதி நிதித்துவம் 6 % தாண்டாமல் இருக்கின்றது.

இருதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமாக 7458 வேட்பாளர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களிள் இருந்து போட்டியிட்டார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இதில் 819 பெண்வெட்பாளர்கள் மாத்திரம்தான் பெண் பிரதிநிதிகளாக போட்டியிட்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக 35 இற்கும் குறைவான வேட்பாளர்கள் மாத்திரம்தான் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிள் ஈடுபட்டு தேர்தலில் வெற்றிபெர வேண்டும் என்று முயற்ச்சி செய்தவர்கள். ஏனையவர்களை பார்க்கின்றபோது அவர்களை கட்ச்சிகளும் சுயேட்சைகுழுக்களூம் பெயரளவில் பெண்களுக்கு தாமும் சந்தர்ப்பத்தை வழங்கினோம் என்பதை கான்பிப்பதற்காகத்தான் பெண்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மிக நீண்டகால போராட்டத்தின் பின்னர் உள்ளூராட்ச்சி மன்றங்களிள் 25% பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண் பிரதி நிதித் துவத்தை அதிகரிப்பதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
நன்றி
மனாஸ் மகீன்
நிறைவேற்று பணிப்பாளர்
கபே அமைப்பு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.