நேற்று முன்தினம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.



அத்துடன் நேற்றைய தினம் (01) 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் இதுவரை மொத்தமாக 11,060 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,582 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,541 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 4,905 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,134 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 179 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 93 பேர் கொழும்பு மாவட்டத்தையும் 33 பேர் களுத்துறை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு 1-15 வரையான பகுதிகளிலிருந்து 51 தொற்றாளர்களும் கோட்டை-30, மீதொட்டமுல்ல-3, வெல்லம்பிட்டிய-1, மருதானை-1, மட்டக்குளிய-1,கொலன்னாவ-3, கொடிகாவத்த-1, பொரளை-2 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் 33 தொற்றாளர்களும் மத்திய மாகாணம் குண்டசாலையில்-1, நுவரெலியா-3, நாவலப்பிட்டிய-1தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.