இன்றைய தினம் (11) இலங்கையில் மேலும் இரு கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் மாரடைப்பினால் இறந்த நிலையில் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் மேலும் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அவர்களில் ஒருவர் கொழும்பு 11 இனை சேர்ந்த 40 வயதுடைய ஆண் என்றும அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மற்றுமொருவர் களனி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் என்பதுடன் கொவிட் தொற்று காரணமாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

எனவே இலங்கையில் கொவிட் பாதிப்பு காரணமாக 44  மரணங்கள் இதுவரை நிகழ்ந்துள்ளன. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.