நாட்டில் இன்று (18) மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. 

ஒருவர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான நீரிழிவு நோயாளியான ஆண் என்றும் வீட்டில் மரணமடைந்துள்ளார் எனவும்,

மற்றுமொருவர் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் எனவும் ஹோமாகமை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் எனவும், இவருக்கு அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இருந்துள்ளது எனவும்,

இன்னொருவர், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் என்றும் இவர் வீட்டில் மரணமடைந்துள்ளார் எனவும் இவருக்கும் நீரிழிவு வியாதி இருந்துள்ளது எனவும் தெரியவருகிறது.. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.