இலங்கையில் (19) நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட்19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நால்வரின் மரணம் இடம்பெற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக, இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 73 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தோரின் விபரங்கள்

கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயது ஆண் - தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் கொவிட் நியுமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 27 வயது பெண். கொவிட் தொற்று இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் காரணமாக அதிகரித்த கல்லீரல் நோய் நிலைமை ஆகும். 

களுத்துறையைச் சேர்ந்த 59 வயது பெண் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் பாதிப்பினால் ஏற்பட்ட நெஞ்சு வலி மற்றும் அதிகரித்த இரத்த அழுத்த ஆகும்.

களுத்துறையைச் சேர்ந்த 86 வயது ஆண்  வீட்டிலேயே மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் பாதிப்பினால் ஏற்பட்ட நெஞ்சு உபாதை ஆகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.